தஞ்சை பிப் 27 தஞ்சைமாவட்டம், தஞ்சாவூர் தாலுக்கா, காசவளநாடு கொல்லாங்கரையைச் சேர்ந்த சூரியம்பட்டியில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ வில்லாயி அம்மன் 58 வது வருட மாசி மகத் திருவிழா இன்றுத் தொடங்குகின்றது.

அருள்மிகு ஸ்ரீ வில்லாயி அம்மன் கோயில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு இன்று 27.02.2021 சனிக்கிழமை பகல் 12.00 மணியளவில் பால்குடம், காவடி எடுத்தலும், மாலை 5.00 மணியளவில் அபிஷேகம், கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

அன்று இரவு 9.00 மணியளவில் R. புகழேந்தி வழங்கும் கீதாஞ்சலி இசைக்குழுவின் இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இவ்விழா சிறக்க சூரியம்பட்டி கிராமவாசிகள் மற்றும் தமிழன் பயோ ஆர்கானிக்ஸ் இயற்கை உரம் நிறுவனத்தினர் அன்போடு வேண்டிக் கொண்டுள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்
தஞ்சை.