தஞ்சாவூர் அக்: 4- பெண்களுக்கான உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், தஞ்சையில் நடைபெற்ற இலக்கிய மன்றக் கூட்டத்தில் எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி வலியுறுத்தல்:

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநகரக் கிளை சார்பாக பல்வேறு தலைப்புகளில் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தஞ்சாவூர் மாவட்ட செயலாளர் புகழேந்தி தலைமை வகித்தார். பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர் அகிலாகிருஷ்ணமூர்த்தி,பேராசிரியர் பொ.திராவிடமணி, கவிஞர்கள் கோ.பாரதிமோகன், கோ.கலியமூர்த்தி, துவாரகா சாமிநாதன், சோலச்சி, கதைசொல்லி சௌபர்ணிகா, விமர்சகர் மணிமேகலை பரத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

“நாணற்காடனின் படைப்புலகம்” என்ற தொகுப்பை அனைவரும் பேசினார்கள். எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி தனது உரையில் நாணற்காடன் படைப்புகளில் அதிகமாக விளிம்பு நிலை மக்களை பற்றியதாக இருந்தது. ,பெண்களின் வேலைகளில் பல்வேறு சிரமங்கள்,துயரங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கியுள்ளன.

பெண்கள் ஆண்களுக்கு நிகராக வேலை பார்த்தாலும் அவர்களுக்கு உரிய சம்பளம் குறைத்து வழங்கப்படுகிறது என்றும் , பல்வேறு நிலைகளில் அடையும் துன்பம் பற்றியும், அதையும் தாண்டி பெண்கள் முன்னேறி வருவதையும், அவர்களுக்குரிய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்து உரையாற்றினார்.

எழுத்தாளர் நாணற்காடன் பத்துக்கும் மேற்பட்ட கவிதை, சிறுகதை, நாவல் , சிறார் இலக்கியம் போன்ற படைப்புகளையும், பல மொழிபெயர்ப்பு நூல்களையும் கொண்டு வந்தவர். இவருக்கு தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மாநகர கிளை சார்பில் பன்முக படைப்பாளி சிறப்பு விருது வழங்கப்பட்டது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/