மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற சிறப்பு முகாம் வருகிற 5ஆம் தேதி தஞ்சையில் நடக்கிறது தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வழங்கப்பட இருக்கிறது இந்த அடையாள அட்டை மூலம் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு சலுகைகள் பெறலாம்.
ஏற்கனவே ஒன்றிய வாரியாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டு இதுவரை 13 இடங்களில் முகாம் நடத்தப்பட்டு உள்ளது இதில் எலும்பு முறிவு மருத்துவர் காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர் மனநல மருத்துவர் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவ சான்று வழங்க உள்ளனர் இதனடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
தஞ்சை மேம்பாலம் அரசு செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு முகாம் நடக்கிறது, தஞ்சை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதியில் அனைத்து வார்டுகளிலும் இதுநாள்வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்,
இதில் கலந்துகொள்வதற்கு மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டை நகல் ஆதார் அட்டை நகல் 6 புகைப்படம் மற்றும் இதற்குமுன் சிகிச்சை பெற்ற சான்றிதழ்கழுடன் வரவேண்டும் இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகளும் முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம் முகாமில் கலந்து கொள்ளும் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும் என்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி : ம.செந்தில்குமார்