தஞ்சாவூர் டிச 16: வல்லத்தில் நடந்த மக்களை தேடி முதல்வர் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்காக பொது சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
தஞ்சை மாவட்டத்தில் மக்களை தேடி முதல்வர் சிறப்பு முகாம் பல இடங்களில் நடந்தது. அந்த வகையில் தஞ்சை அருகே வல்லம் பேரூராட்சி திருமண மண்டபத்திலும் நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனுக்களை பெற்றுக் கொண்டார். முன்னதாக இந்த நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாத பொதுமக்களுக்காக பொது சுகாதாரத்துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். அகிலன் தலைமையில் மருத்துவக்குழுவினர் மொத்தம் 120 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு முகக்கவசம், சானிட்டரி மருந்து வழங்கப்பட்டது.
மேலும் இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தம் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சி மற்றும் பள்ளி, மாணவ, மாணவிகளின் நடன நிகழ்ச்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் வல்லம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கிழக்கு தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் தலைமையில் பள்ளி மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இதேபோல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கு, தூய சவேரியார் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவின்படி வல்லம் பேரூராட்சி பேரூராட்சி செயல் அலுவலர் பிரகந்தநாயகி, துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் செய்திருந்தனர்.
நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/