தஞ்சை மாவட்டத்தில் உதவி பெறும் தொடக்க,நடுநிலை,உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகள் மொத்தம் 299 செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளின் நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் சாரந்த கோரிக்கைகளை சிறப்பு முகாம் நடத்தி தீர்வு,அளிக்கப்படும்,என”மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியிருந்தார் .

அதன்படி நேற்று 08ம் தேதி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் 51 உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாகிகள் தலைமையாசிரியர்கள் கலந்துகொண்டனர். அப்பள்ளிகளின் 168 எண்ணிக்கையிலான கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றில் தகுதியான கோரிக்கைகள் பிப் 15க்குள் முடிக்க வேண்டுமென்று தஞ்சை சிஇஒ சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

இம்முகாமில் அனைத்து டி.இஒக்கள் பி.இ.ஓ கள் மற்றும் நேர்முக உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

நாராஜன் நிருபர்.
https://thanjai.today/