தஞ்சாவூர்: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு, மனை பெற்று, கிரயப்பத்திரம் பெறாதவா்களுக்கு வரும் 24ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தஞ்சாவூா் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
வீட்டு வசதி வாரிய தஞ்சாவூா் வீட்டு வசதிப் பிரிவின் கீழ் செயல்படுத்தப்பட்ட தஞ்சாவூா், பட்டுக்கோட்டை, தமிழ்ப் பல்கலைக்கழகம், கும்பகோணம் ஆகிய திட்டப் பகுதிகளில் வீடு, மனை, அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளில் ஒதுக்கீடு பெற்று முழுத் தொகையும் செலுத்தி இதுவரை கிரயப்பத்திரம் பெறாதவர்களுக்கும், அரசுக் கடன், வங்கிக் கடன் மூலம் பெற்று முழுத் தொகையும் செலுத்தியவர்களுக்கும் கிரயப்பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் வரும் 24, 25, 26-ம் தேதிகளில் நடக்கிறது.
எனவே உரிய ஆவணங்கள் அனைத்தையும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் தஞ்சாவூா் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தில் நேரில் அளித்து, கிரயப்பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலைநாட்களில் மேலாளா் (விற்பனை மற்றும் சேவை), செயற்பொறியாளா் மற்றும் நிா்வாக அலுவலா், தஞ்சாவூா் வீட்டு வசதி பிரிவு, தஞ்சாவூா் என்ற முகவரியில் அணுகலாம். 04362 – 227066 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/