தஞ்சை சூலை: 15, கல்விக்கண் திறந்த பச்சை தமிழர் காமராஜர் 119-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பிரவுசர் புத்தக உலகம் நிறுவனத்தின் சார்பில் “சிறப்பு புத்தக கண்காட்சி” நடைபெற்றது, சிறப்பு புத்தக கண்காட்சியை தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.


முதல் புத்தக விற்பனையை.விஜய், .ஹாரிஸ்,வெங்கடேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள், மற்றும் பொறியாளர் மாலிக் தம்பதியர் புத்தகங்களைப் பெற்றுக் கொண்டனர். தஞ்சை தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு இராமலிங்கம் வருகை தந்த சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம், சால்வை அணிவித்து வரவேற்ப்புரையாற்றினார்.

மாநில திராவிடர் கழக அமைப்பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன், இரா. செந்தூர பாண்டியன்,
கனகசபாபதி , மானவீரன், மும்தாஜ் , பிரியா,கமலி, பிரபாகரன் மற்றும் பேராசிரியர் குட்டிமணி ஆகியோர் முன்னிலை வகித்தார்கள் பிரவுசர் புத்தக நிலைய உரிமையாளர் நா. மணிமொழி நன்றியுரை கூறினார்.

பிரவுசர் புத்தக உலகத்தில் அரசியல் தலைவர்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள், சிறப்பு மருத்துவர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், மற்றும் தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள், கவிஞர்கள், சமையல் அறிஞர்கள், நாவலாசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு கான போட்டி தேர்வில் வெற்றி பெற தேவையான புத்தகங்கள், எழுது பொருட்கள், ஒரே இடத்தில் அனைவரும் வாங்கி பயன்பெற “பிரவுசர் புத்தக உலகத்தில் “குவிக்கப்பட்டுள்ளன.

சிறப்பு புத்தக கண்காட்சி ஜூலை 15 முதல், ஆகஸ்ட் 5 ம் தேதி வரை நடைபெறும். இப்புத்தக கண்காட்சியில் அனைத்து புத்தகங்களும், 10% சதவீதம் கழிவுடன் சிறப்பு தள்ளுபடியுடன் புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/