தஞ்சாவூர் சூலை 20: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பகுதியில் விதைப்பந்துகள் விதைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இன்பத்தமிழ் ஊரக வளர்ச்சி நடுவம் சார்பில் இலட்சம் விதைப் பந்துகளை விதைக்கும் லட்சியப் பயணம் ஒவ்வொரு ஊராட்சியாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே ரெட்டவயல் ஊராட்சிக்கு உட்பட்ட மடையான் குளக்கரையில் அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளையுடன் இணைந்து விதைக்கும் பணி நடைபெற்றது.
நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் விதைப்பந்து விதைக்கும் பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். ரெட்டவயல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அன்னை அமராவதி கல்வி அறக்கட்டளை பொறுப்பாளர்கள் முனைவர் ஜீவானந்தம், அமரா அழகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் வழக்கறிஞர் கருப்பையா, திராவிடர் விடுதலைக் கழக பொறுப்பாளர் ஜெயச்சந்திரன், தாழம்பூ இதழ் ஆசிரியர் கோவிந்தராஜன், தஞ்சை விதைப்பந்து மருத உதயகுமார், மெய்ச்சுடர் நா. வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/