தென்னக அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி, சேலம் மாவட்டத்தில் சக்கர வியூகம் எனும் துப்பாக்கி சுடும் வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து சுமார் 300 க்கும் அதிகமான வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிக்காட்டினர்.

இந்தப்போட்டியில் திருச்சி மாவட்ட ரைஃபிள் சங்கத்தில் இருந்து 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர்.

இதில் சவுதி அரேபியாவில் வசித்து வருகின்ற, ஜெத்தா முத்தமிழ்ச் சங்கத்தினருடன் இணைந்து செய்கின்ற சமூக சேவகர் தற்போது தாயகத்தில் வசிக்கின்ற திருச்சி பீமநகரைச் சேர்ந்த பதுருத்தீன் அப்துல் மஜீது அவர்களின் மனைவி திருமதி ஃபைரோஸ் பதுருத்தீன் அவர்கள் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெண்கலப் பதக்கத்தையும்,
அவரின் மகள் செல்வி ஃபாத்திமா பதுருத்தீன் அவர்கள் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் வென்று பெருமை சேர்த்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சேலம் மாவட்ட காவல்துறை ஆணையர் திரு செந்தில் அவர்கள் வெற்றி பெற்றவர்களை பாராட்டி பரிசுகளை வழங்கி, பாரதி கண்ட புதுமைப் பெண்களாய் இவர்கள் பரிசு பெற்றதை பாராட்டுகின்றேன்.
பெண்கள் இம்மாதிரியான வீர விளையாட்டுகளில் தொடர்ந்து அதிக அளவில் பங்கெடுத்து தங்கள் திறமையை நீரூபிக்கவும், தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் தற்காப்பு கலைகளை கற்றுத் தேரவேண்டும் என்றும் பேசினார்.

பரிசு பெற்ற பதுருத்தீன் அவர்களது குடும்பத்தினரை ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் பாராட்டி மகிழ்கின்றது.

செய்தி புயலரசு சவூதி