தஞ்சை ஏப்ரல் 20 தஞ்சை பேராவூரணி அருகே உள்ள ஆவணம் இண்டிபென்டன்ட் சமூகப் பணி குழுவினர் திரைக்கலைஞர் விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஆவணத்தில் மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்தினர். 

ஆவணத்தில் செயல்பட்டு வரும் இண்டிபென்டன்ட் சமூகப்பணிக்குழு இளைஞர் குழு ஏரி, குளங்கள், தூர்வாருதல், குளக்கரை, ஏரி, பள்ளிகளில் மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. இந்தாண்டு நிறைவுக்குள் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடத் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

மரக்கன்றுகள் நடுவதை தமது பணிகளில் ஒன்றாக கொண்டு செயல்பட்டு வந்த திரைக்கலைஞர் விவேக் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆவணத்தில் பசுமை விவேக் என்ற பெயரில் பள்ளிகள், கோயில், பொது இடங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 350 மரக்கன்றுகள் நட்டனர். 

நிகழ்ச்சியில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மு.கருணாநிதி சமூகப்பணிக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் மணிகண்டன், ரசூல், கருணாகரன், ரவி, சொக்கநாதன், அப்பாஸ், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை