தஞ்சாவூர் செப் .18- பெரியார் பிறந்தநாளையொட்டி சமூகநீதி நாள் உறுதிமொழி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆ்ட்சியர் தலைமையில் நடைபெற்றது.

பகுத்தறிவு பகலவன் பெரியாரின் பிறந்த நாளை தமிழக முதல்வர் ஆண்டுதோறும் சமூகநீதி நாளாக கொண்டாட சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழக அரசு பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17ஆம் தேதி தலைமைச் செயலகம் தொடங்கி அனைத்து அரசு அலுவலகங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன்படி தஞ்சை மாவட்டத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
https://thanjai.today/