தஞ்சையில் பெய்த தொடர் மழை காரணமாக ஏரி, குளங்கள் மற்றும் குட்டைகள், ஓடைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது, மழை வந்தாலே தரையில் பல உயிர்கள் தோன்றி பூமியில் நகர்வதைக் காணலாம்.

இந்த அடைமழையில் வாய்க்கால் கரையோரம், வயல் வரப்புகள், மற்ற இடங்களில் நத்தைகள் அதிகளவில் காணப்படுகின்றன, இதை சிலர் பிடித்து உணவுக்காக விற்பனை செய்கின்றனர்.

நத்தைகளை சமைத்து சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து மூல நோய் குணமாவதாக கூறுகிறார்கள், ஒரத்தநாடு காட்டூர் வாண்டையார் இருப்பு சூரக்கோட்டை மாரியம்மன் கோயில் பகுதிகளில் வயல் நத்தையை பிடித்து விற்பனைச் செய்கின்றனர், விற்பனை இந்த மழைக்காலத்தில் சூடு பிடித்து நடக்கிறது.

செய்தி : ம.செந்தில்குமார்