நீதிக்கட்சியின் நிறுவனர்களில் ஒருவரும், திராவிட இயக்கத்தின் தலைவர்களில் ஒருவருமான சர்.பி தியாகராசர் 169வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது, தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி மற்றும் உயர்விற்காக பல்வேறு சமூக மற்றும் அரசியல் பணிகளை செய்தவர்.

பல பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர், சென்னை தியாகராயர் கல்லூரியை இவரே நிறுவினார், இன்று சென்னையில் தி நகர் என்று அழைக்கப்படுவது, இவரது பெயரான் தியாகராயர் நகர் ஆகும்.