தஞ்சை மே, 10:கொரோனா சிகிச்சை மையத்தில் உள்ளவர்களின் மன இறுக்கத்தைப் போக்கும் வகையில் வாரம் ஒருமுறை செய்து ஆர்கஸ்ட்ரா இசைக்கலைஞர் ஒருவர் பாடி உற்சாகப்படுத்தி வருவதை பலரும் பாராட்டியுள்ளனர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் பிராங்கிளின் வயது (46) இவர் ஜீவன் சுருதி என்ற பெயரில் ஆர்கெஸ்ட்ரா இசை குழு ஒன்றை நடத்தி வருகிறார், இவர் இசை நிகழ்ச்சிகள் இல்லாத நாட்களில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் வல்லத்தில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் கடந்த 1ஆம் தேதி மே தினத்தில் மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வழிகாட்டுதலின் மாலை இசை நிகழ்ச்சி நடத்தினார், அந்த நிகழ்ச்சி கொரோனா சிகிச்சை பெறுவர்களுக்கு உற்சாகத்தை அளித்ததாக தெரிவித்தனர், இதையடுத்து ஆட்சியர் கோவிந்தராவ் வாரம் ஒருமுறை நிகழ்ச்சி நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

அதன்படி நேற்று இரவு நிகழ்ச்சியை நடத்தினார் இதுகுறித்து பிராங்களின் கூறுகையில் கொரோனா சிகிச்சை மையத்தில் பலரும் தனிமையாக இருப்பதால் மன இறுக்கத்தின் அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக மே 1ஆம் தேதி மூன்று மணி நேரம் இசை நிகழ்ச்சி நடத்தி அங்கிருந்த பலரும் பாராட்டினர் மேலும் அவர்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டது.

இது குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தொடர்ந்து வாரம் வாரம் இசை நிகழ்ச்சியை நடத்த கேட்டுக்கொண்டார் இரண்டாவது வாரமாக நடத்தினேன் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உற்சாகமாக ரசித்து மகிழ்ச்சியாக இருந்தனர் இதற்காக நான் எவ்வித கட்டணமும் பெறவில்லை ஆனால் சிகிச்சை மையத்திற்கு செல்லவே எல்லோரும் அச்சப்படும் நேரத்தில் நாம் சமூக இடைவெளியுடன் முக கவசம், கொரோனா தெற்று பரவாமல் இருக்க பாட்டுப் பாடி அவர்களை அழைத்து விழிப்புணர்வு ஏற்பத்தி வருகிறேன் என்று கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை