தஞ்சை நவ 03: தஞ்சையில் சுந்தரம் நகர் 10வது தெருவில் சாக்கடை நீர் குளம்போல தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.
தஞ்சை சுந்தரம் நகர் 10வது தெருவில் பாதாள சாக்கடை குழியிலிருந்து சாக்கடை நீர் பெருக்கெடுத்து சாலைகளில் ஓடி குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த பகுதியில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும் தொற்றுநோய் பரவும் என்ற அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக பாதாள சாக்கடை நீர் வெளியேறாமல் கழிவுநீர் மூடியை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகராஜன் நிருபர்
http://thanjai.today/