தஞ்சை மே 12 முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளன் சாந்தன் முருகன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு பேரறிவாளன் சாந்தன் முருகன் நளினி உள்ளிட்ட 7 பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகின்றனர்.

இவர்களை விடுதலை செய்யக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர், இந்த நிலையில் உச்ச நீதி மன்ற 2018 ஆம் ஆண்டு பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவு எடுக்கலாம் என தீர்ப்பளித்தது இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு சட்டமன்றப் பேரவையில் 2018 செப்டம்பர் ஒன்பதாம் தேதி பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது.

ஆனால் இதுநாள் வரை ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை, இதேபோல் உச்ச மன்றத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது, ஆனால் 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் உள்ளார். அவர்களின் விடுதலை குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.