விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் தொடர் முழக்கப் போராட்டம் தேசியக்கொடியுடன் அணிவகுப்பு. அனைத்து தொழிற்சங்க கூட்டத்தில் முடிவு. அனைத்து தொழிற்சங்க தலைவர்கள் கூட்டம் தஞ்சாவூர் கீழராஜவீதி அலுவலகத்தில் 19~1~21 சிஐடியூ மாவட்ட செயலாளர் சி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சி மாநில செயலாளர் சி.சந்திரகுமார் மாவட்ட செயலாளர் ஆர் தில்லைவனம் தொமுச மாவட்ட செயலாளர் கு.சேவியர் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ச.செங்குட்டுவன் ஐஎன்டியுசி மாவட்ட செயலாளர் என்.மோகன்ராஜ் ஏ. ரவிச்சந்திரன் ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் கே .ராஜன் வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.அன்பழகன் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் வெ.சேவையா, துரை மதிவாணன், தி.கோவிந்தராஜன், ஆர்.பி. முத்துக்குமரன், பி.செல்வராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர் ஜனவரி23 நாடு தழுவிய அனைத்து தொழிற்சங்க தொடர் முழக்கப் போராட்டத்தை ஒட்டி தஞ்சை ரயிலடியில் காலை 10 மணிக்கு துவங்கி பெருந்திரளாக தொடர் முழக்கப் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டது.

ஜனவரி 26 குடியரசு தினத்தன்று தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுகூடி தங்கள் தேசியக் கொடியுடன் இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. கடும் குளிரிலும் போராடிக் கொண்டிருக்கின்ற விவசாயிகளின் கோரிக்கையான வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வேண்டும். தொழிலாளர்களுக்கு எதிரான சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும் மேற்கண்ட கோரிக்கைகளுக்காக நாடு முழுதும் நடைபெறுகின்ற அனைத்து தொழிற்சங்க இயக்கத்தை தஞ்சையில் சிறப்பாக நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டது. 1982 ஜனவரி 19 அனைத்து தொழிற்சங்க முதல் பொது வேலைநிறுத்தத்தில் காவல்துறையின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான நாகூரான் அஞ்சான் ஞான சேகரன் நினைவு நாளையொட்டி உறுதி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெறுகின்ற போராட்டத்தில் முழுமையாக பங்கேற்று கோரிக்கைகளை வெற்றியடையச் செய்ய உறுதி ஏற்கப்பட்டது.

க.சசிக்குமார், நிருபர்.
தஞ்சை.