தஞ்சை சரபோஜி அரசுக் கல்லூரி மாணவர்கள் வேளாண் ம‍சோதாவிற்கு எதிராக ந‍ேற்று போராட்டத்தில் இறங்கினர் இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் மாணவர்கள் பங்கேற்றனர்.

அப்போது அவர்கள் 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர் ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் மாணவர்கள் வகுப்புகளுக்கு சென்றனர்.

தஞ்சை சரபோஜிக்கல்லூரி எப்போதும் சமூக நலன் சார்ந்த விடயங்களில் பங்கேற்று தங்களது சனநாயக எதிர்ப்பை காட்டுவது வழக்கம். மண்டல் கமிஷன் அமலாக்கத்திற்கு தஞ்சையில் அவர்கள் செய்த போராட்டங்கள் குறிப்பிடத்தக்கது.