தஞ்சை மே 23 தஞ்சாவூரில் அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 60 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். என மாவட்ட ஆட்சியர்கோவிந்தராவ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தஞ்சாவூர் மாவட்டத்தில் இரண்டாவது அலை காரணமாக நாளுக்கு நாள் நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே அரசு வெளியிட்டுள்ள ஒரு விளக்கத்தை பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டும், சுயகட்டுப்பாட்டுடன் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் முதல் கவசம் அணிந்து வெளியே வரவேண்டும், இல்லாவிட்டால் இந்த நோய் மீண்டும் பரவும்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவர்களை தாமதமின்றி உடனடியாக சேர்ப்பதற்கு தேவையான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறோம், மருத்துவமனையில் உடனடியாக சேர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறோம். இந்தப் படுக்கைகள் நிரம்பி விட்டால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுவோம், எனவே பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்றவற்றை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட அவர்கள் கட்டாயம் தனிமையில் இருக்க வேண்டும், குடும்ப உறுப்பினர்களுக்கு பரவாத வகையில் அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். இதுபோல நாளுக்கு நாள் நோய் பரவி வந்தால் மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வரும் நிலையில் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது சிரமமாகிவிடும், இதை பொதுமக்கள் புரிந்து கொண்டு அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 30, மருத்துவர்கள் 50, செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்காக 60 மருத்துவர்கள், 100 செவிலியர்கள், தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் சிகிச்சை அளிப்பதற்கும் என்னென்ன நடவடிக்கை தேவையோ அதை மாவட்ட நிர்வாகம் எடுத்துக் கொள்ளலாம் என முதல்வர் அனுமதி வழங்கியுள்ளனர் இதன்படி மாவட்ட தேவைக்கேற்ப பொது மக்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பதற்கும் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் முழுவீச்சில் எடுக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை