தஞ்சை சூன் 30: வெளி மாவட்டங்களில் இருந்து தஞ்சைக்கு 7 லாரிகளில் கடத்தி வரப்பட்ட 120 டன் நெல் மூட்டைகளை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்படும் நெல் மூட்டைகள் தஞ்சையில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் வந்தன.

இதையடுத்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் கடந்த இரண்டு நாட்களாக மேற்கொண்ட வாகன சோதனையில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அனுமதியின்றி கடத்தி வரப்பட்ட 120 டன் எடை கொண்ட 2,000 நெல்மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதை ஏற்றி வந்த 7 லாரிகளும் கைப்பற்றப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்