தஞ்சாவூர் ஆக 30: தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லோடு வேனை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே தொண்டராயன்பாடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் அதிகாலை பூதலூர் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகஜீவன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது அவ்வழியாக லோடு வேன் ஒன்று வந்தது. தொடர்ந்து போலீசாரை கண்டவுடன் வேனை நிறுத்தி விட்டு அதை ஓட்டி வந்தவர் தப்பி ஓடிவிட்டார்.

உடனடியாக போலீசார் அந்த வேனை ஆய்வு செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்துள்ளது.

உடனடியாக லோடு வேனை பறிமுதல் செய்து பூதலூர் ஸ்டேசன் கொண்டுவந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/