தஞ்சாவூர்: தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் உரிய ஆவணங்களின்றி வைக்கப்பட்டிருந்த 850 நெல் மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

தஞ்சாவூா் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகளின் நெல் கொள்முதல் செய்யப்படுவதாக ஆட்சியா் தினேஷ் ஆலிவா் பொன்ராஜுக்கு தகவல் வந்தது. தொடா்ந்து, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா்.

இதன்பேரில், பாபநாசம் வட்டம் வளா்த்தாமங்கலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட வழங்கல் அலுவலா் கமலக்கண்ணன், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் ரகுராமன் உள்ளிட்டோா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, விவசாயிகளிடம் இருந்து பெறப்படும் நெல் மூட்டைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், முறையான ஆவணங்கள் இன்றி குவித்து வைக்கப்பட்டிருந்த 850 நெல் மூட்டைகளை அலுவலா்கள் பறிமுதல் செய்து பாபநாசம் அரசு தானிய சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனா்.

காவல் உதவி ஆய்வாளா் செல்வராணி, முதுநிலை வருவாய் அதிகாரி வரதராஜன், வருவாய் அதிகாரி சரவணன், கிராம நிா்வாக அதிகாரி ஜோதி பாண்டியன் உள்ளிட்ட வருவாய் துறையினா், வட்ட வழங்கல் துறையினா் உள்ளிட்டோா் உடன் இருந்தனர்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/