தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த 2 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே பழமார்நேரி ஆஞ்சநேயர் கோவில் அருகில் சப் இன்ஸ்பெக்டர் சார்லிமென் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை மறித்து சோதனை செய்தனர். அப்போ அனுமதியின்றி மணல் எடுத்து வந்தது தெரிய வந்தது.

உடனடியாக வண்டியை பறிமுதல் செய்து அதை ஓட்டி வந்த பழமார்நேரி மாதா கோவில் தெருவைச் சேர்ந்த சிங்கராயர் மகன் அஜித்குமார் என்பவரை கைது செய்தனர்.

இதேபோல் காவேரி ஆற்றுப் புதுப்பாலம் அருகில் ஆய்வு பணியில் ஈடுபட்டிருக்கும் போது அவ்வழியாக வந்த மாட்டு வண்டியை ஆய்வு செய்தபோது அதில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. உடனடியாக மணல் ஏற்றி வந்த முல்லைக்குடி மேல குடியான தெருவைச் சேர்ந்த துரைராஜ் மகன் சிவா (25 ) என்பவரை கைது செய்தனர். மேலும் மாட்டு வண்டியும் பறிமுதல் செய்யப்பட்டது..

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்