தஞ்சை 23 தஞ்சை உரிமைக்குரல் ஓட்டுநர் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது, மாநாட்டிற்கு மாநிலத் தலைவர் சுரேந்தர் தலைமை வகித்தார், பொதுச் செயலாளர் ஜாகிர் உசேன் முன்னிலை வகித்தார், மாவட்ட செயலாளர் சிங்காரம் வரவேற்றார் சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார துணை போக்குவரத்து ஆணையர் உதயகுமார் கலந்துகொண்டார்.
மாநாட்டில் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் பாதிக்கப்படாமல் இருக்க வாகனங்களுக்கு நிலையான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும், வாகன தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கால அவகாசத்தை ஓராண்டு நீட்டிக்க வேண்டும், வாடகை வாகனங்களை இயக்கும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், சுற்றுலா வாகனங்களுக்கு சுங்க சாவடி கட்டணங்கள் முழுவதுமாக விலக்கு அளிக்க வேண்டும், நலவாரியத்தில் உறுப்பினராக வழிமுறைகளை எளிமையாக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநில பொருளாளர் காளிமுத்து, மாநில துணை பொதுச்செயலாளர் சபரிநாதன், தஞ்சை மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், துணை செயலாளர்கள் அழகேசன், கலைச்செல்வன் மற்றும் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் கலந்துகொண்டனர் முடிவில் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.
செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை.