தஞ்சை மே 02 தஞ்சை மாவட்டம் திருவையாறில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாத தனியாா் திருமண மண்டபத்துக்கு அலுவலா்கள் சீல் வைத்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு கல்கி அக்ரஹாரத்திலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காதணி விழா நடைபெற்றது. இதில் தமிழக அரசு அமல்படுத்தியுள்ள கொரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல், கூட்டம் அதிகளவில் இருந்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த திருவையாறு வட்டாட்சியா் நெடுஞ்செழியன், காவல் உதவி ஆய்வாளா் செந்தில்குமாா், சுகாதார அலுவலா்கள் திருமண மண்டபத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது, விதிமுறைகளை மீறி கூட்டம் அதிகமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மண்டபத்தில் இருந்தவா்களை வெளியேற்றிவிட்டு, வாயில் கதவை மூடி சீல் வைத்தனா்.

திருமணம், காதணி விழா போன்ற நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் 50 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், விதிமுறையை மீறியதாக இந்த மண்டபத்துக்கு சீல் வைக்கப்பட்டது என அலுவலா்கள் தெரிவித்தனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.