தஞ்சை சூன் 09: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி இயங்கிய துணிக்கடையை வருவாய்த்துறையினா் பூட்டி சீல் வைத்தனா்.

ஒரத்தநாடு பகுதியில் முழு ஊரடங்கு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என உதவி ஆணையா் (கலால்) பழனிவேல், வட்டாட்சியா் சீமான் மற்றும் வருவாய்த் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, ஒரத்தநாடு கடைத்தெருவில் ஜவுளிக் கடை ஒன்று விதிமுறைகளை மீறி திறக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது.

இதையடுத்து வருவாய்த் துறையினா் ஜவுளிக்கடையை பூட்டி சீல் வைத்தனா். மேலும், சந்தைப்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட் பகுதியை ஆய்வு செய்தனா். இதேபோல் முகக்கவசம் அணியாமல் வியாபாரம் செய்த மளிகைக் கடையின் உரிமையாளருக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்