தஞ்சை மே 12 நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்காரணத்தால், பரிசோதிக்க தஞ்சை மாவட்டத்தில் 14 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மருத்துவமனைகள், ஊரக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் ஸ்கிரீனிங் மையம் தொடங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்தார்.

தஞ்சை மகர்நோன்பு சாவடி பகுதியிலுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுற்று சுவரை அகற்றி அங்கன்வாடி மையத்தை தற்காலிக பரிசோதனை மையமாக மாற்றவும், அதை சுற்றி தடுப்புகள் அமைக்கவும். பணி நடைபெறுகிறது.

பின்னர் நிருபர்களிடம் அவர் கூறும்போது, தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் காரணமாக நோய்த் தொற்று அதிக அளவில் உள்ளது, இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நோய் கண்டறியப்பட்டு அவர்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்க ஸ்கிரீனிங் சென்டர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் மட்டும் இயங்கி வந்த ஸ்கிரீனிங் சென்டர், தற்போது வல்லம், பட்டுக்கோட்டை, கும்பகோணம், கேர் சென்டர்களில் தொடங்கி இயங்கி வருகிறது. மேலும் கும்பகோணம், திருவையாறு, பாபநாசம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட 14 அரசு மருத்துவமனைகளில் ஸ்கிரீனிங் சென்டர் இயங்கி வருகிறது. மேலும் 14 வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஊரக ஆரம்ப நிலையங்களிலும் கணினி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 14 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், ஊரக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு தனியார் மருத்துவமனை ஆகியவற்றில் ஸ்கிரீனிங் மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்கிரீனிங் மய்யத்தில் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால், அவர்கள் அச்சப்பட தேவையில்லை, அந்த பகுதியில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் துப்புரவு ஆய்வாளர்கள் கிராம சுகாதார செவிலியர்கள் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் வருவாய் துறை உள்ளாட்சி துறையினருடன் இணைந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள ஸ்கிரீனிங் மையத்திற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.

எடுப்பதற்கு ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் எனவே திருப்பனந்தாள் திருவிடைமருதூர் பகுதிகளிலிருந்து சிகிச்சைக்காக நோயாளிகள் தஞ்சைக்கு வரத்தேவையில்லை, அங்கு உள்ள அரசு மருத்துவமனையில் உள்ள ஸ்கிரீனிங் சென்டரில் ஆலோசனை பெற்று தங்களை வீடுகளில் தனிமைப் படுத்திக் கொள்ளலாம், தேவைப்படுவோர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர் என்றால் ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கோட்டாட்சியர் வேலுமணி சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
தஞ்சை