தஞ்சாவூர், அக்.13- தஞ்சையில் உள்ள பெண்கள் கிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்ற விழா (2021-22) நடைபெற்றது.

இவ்விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியை அனிதா பிரமிளா பூரணி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டாக்டர் ராம் மனோகர் கலந்துகொண்டு பேசினார். மாணவி மதுமிதா வரவேற்றார்.

வரவேற்பு நடனத்தை மாணவி சண்முகப்பிரியா செய்தார். விண்வெளியில் பெண்கள் என்ற தலைப்பில் மாணவி சுவாதியும், பூமியை காப்போம் என்ற தலைப்பில் பத்தாம் வகுப்பு மாணவிகள் சார்பில் அறிவியல் நாடகமும், அறிவியல் ஆத்திசூடி என்ற தலைப்பில் நானும் அபிராமியும் விழாவில் உரையாற்றினார்.

மேலும் மரங்களுக்கு தாவரவியல் பெயர் பலகை பதித்தல் மற்றும் விதைப்பந்துகள் அளித்தல் போன்றவைகளும், ஞானிகள் பற்றி தெரிந்து கொள்வோம் என்ற கருத்துரையும் இடம்பெற்றன. மேலும் குழு நடனம் போன்றவைகளும் மனைவி சார்பில் நடைபெற்றது. நீ வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிகளை மாணவி தீபிகா தொகுத்து வழங்கினார். முடிவில் மாணவி ரோகிணி நன்றி கூறினார்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/