தஞ்சாவூர் பிப்: 5, தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை ஒன்றியம் கோனூர் கிராமத்தைச் சேர்ந்த கர்ணன் (50)இவர் அப்பகுதியில் உள்ள வெண்ணாற்றில் அடியாட்கள் உதவியுடன் கள்ளத்தனமாக மணல் அள்ளி விற்பனை செய்துஅவரிடம் பூண்டி கிராமம் மேலத்தெருவை குணசேகரன் மகன் ராகுல் (22) மற்றும் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிலர் கூலி வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனவரி 31ஆம் தேதி கர்ணனின் வீட்டில் வைத்திருந்த ரூபாய் 30 ஆயிரத்தை திடீரென காணாமல் போய்விட்டது வீட்டின் அனைத்து இடங்களிலும் தேடியும் பணம் கிடைக்கவில்லை இதையடுத்துகூலி தொழிலாளியான ராகுல் திருடி இருக்கலாம் என சந்தேகப்பட்டு அவரை பிப்ரவரி 1ஆம் தேதி அழைத்து விசாரணை செய்துள்ளார்.
அதற்கு அவர் நான் பணத்தை திருடவில்லை என அவர்கூறவே கர்ணனின் மகன் லட்சுமணன் மற்றும் அடியாட்கள் ராகுலின் கண்ணை துணியால் கட்டி அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று ஒரு மரத்தில் சாய்ந்தவாறு நிற்கவைத்து பின்னர் அவரது இரு கைகளையும் மற்றவர்கள் பிடித்துக்கொண்டு கர்ணனின் மகன் லட்சுமணன் அடியாட்கள் விக்னேஸ்வரன் ஆகிய இருவரும் ராகுலின் பிட்டத்தில் சதை கிழியும் அளவிற்கு தடியால் சரமாரியாக தாக்கியுள்ளனர் இதில் தடியால் அடிப்பவர் காவி வேட்டி கட்டியுள்ளது கவனிக்க வேண்டியது.
பணம் கிடைக்காததால் அவரை வீட்டுக்கு அனுப்பி விட்டனர் ராகுல் கொடூரமான முறையில் தாக்கியதை மொபைலில் வீடியோ எடுத்து அக்கும்பல் நேற்று உன் ஆம் தேதி அன்று அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து வைரல் ஆகியுள்ளனர் இதனால் மன உளைச்சலும் அவமானமும் ஏற்பட்டதால் மனமுடைந்த ராகுல் நேற்று மாலை எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் இச்சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து இக் கொடூரமான செயலை செய்த குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இச்சம்பவத்தை கண்டித்து பல்வேறுபட்ட அமைப்புகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
செய்தி க.சசிகுமார் , நிருபர்
தஞ்சை