தஞ்சை மே 14: தஞ்சையில் கொரோனாவால் 8 பெண்கள் உட்பட 11 பேர் பலியாகி உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 369 ஆக பதிவாகியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் நேற்று 683 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதில் 162 பேர் குணமடைந்து வீடு திரும்பினார். இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 32 ஆயிரத்து 264 ஆக உயர்ந்தது. தற்போது 4454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் பலியானார்கள். மாவட்டத்தில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 369 ஆக பதிவாகியுள்ளது.

இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் யாரும் வெளியில் செல்வதையும் மற்றும் சந்திப்பதையும் முற்றிலும் தவிர்க்க வேண்டும், வெளியில் எங்கும் செல்லாத பல பெண்கள் வீட்டில் உள்ள ஆண்கள் வெளியில் சென்று அவர்களுக்குள்ள தொற்றினால் பாதிக்கப்பட்டு இறந்துள்ள துக்ககரமான செய்திகள் வருகின்றன.

வெளியே செல்வதை தவிர்த்து கொரோனா தொற்று சங்கிலியை உடைத்து நம் அன்பிற்குரியவர்களை காப்போம்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்.