இயற்பியல் பேராசிரியராக நீண்ட காலம் பணி செய்தவரும் இசைத்துறையில் முக்கிய சாதனைகள் செய்தவரும், தன்னுடைய முனைவர் ஆய்வில் சிலப்பதிகாரம் மற்றும் தொல்காப்பியத்தில் சொல்லப்படும் இசைக் குறிப்புகளின் அடிப்படையில் அதில் குறிப்பிடப்படும் இசை குறிப்பொன்றின் அதிர்வெண்ணை மிகத் துல்லியமாகக் கணக்கிட்டவருமான பேரா முனைவர் எஸ்.ஏ. வீரபாண்டியன் காலமானர்..
தஞ்சை சரபோஜி அரசு கலைக்கல்லூரியில் சில காலம் பணியாற்றி பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணி புரிந்தார், புதுக்கோட்டையில் ஒரு தனியார் கல்லூரியில் முதல்வராகப் பணி செய்து ஓய்வு பெற்றார். பெரியார் கொள்கைகளில் மிகத்தீவிரமான பற்றுடையவர். திரு வீரமணி அவர்களுடன் சில காலம் நெருக்கமாக இருந்து செயல்படவும் செய்தார். இளையராஜா அவர்கள் வெளிநாடு சென்று சிம்பனி இசைத்ததாகப் பேசப்பட்டபோது வீரபாண்டியன் மாற்றுக் கருத்தொன்றை முன்வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்..
MUXEL என்கின்ற ஒலியின் நுண்ணிய வடிவத்தின் அமைப்பினை கண்டறிந்து அதற்கு PIXEL என்பதைப் போல் MUXEL என பெயரிட்டார். சிலப்பதிகாரம், மற்றும் பண்டைய இலக்கியங்களில் அமைந்த இசை குறிப்புகள் அவை இயற்பியலின் ஒலியியலோடு இயைந்து போகும் கூறுகளை ஆய்வு செய்து வெளியிட்டவர். திருச்சி National Institute of Technology யில் சில காலம் தனது ஆய்வு பணிகளை செய்துள்ளார்..
ஒய்வு பெற்று தஞ்சையில் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் தங்கியிருந்தார், கொரோனாத் தோற்று காரணமாக, திடிரென்று உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மறைந்தார், இயற்பியலுடன் கூடிய இசை நோக்கில் அன்னாரின் பங்கு அளவிட முடியாதது..
செய்தி : அமுதன்