தஞ்சை பிப்.8 :நிரந்தர பொதுச் செயலாளரே என சசிகலாவை வரவேற்று அதிமுக பெயரில் தஞ்சையில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது, சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் அவர் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி ஓய்வு எடுத்து வருகிறார் சசிகலா இந்த நிலையில் சசிகலா பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வருகிறார் தமிழக எல்லையில் இருந்து சென்னை வரை பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்க அமமுக வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

சசிகலாவை வரவேற்று பல்வேறு மாவட்டங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ள நிலையில் அமமுக வினர் மட்டுமின்றி அதிமுகவினர் சிலரும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர், அப்படி சுவரொட்டி ஒட்டிய நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு வருகின்றனர், இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தஞ்சை கீழவாசல் மேம்பாலம் உள்ளிட்ட பல இடங்களில் அதிமுக பெயரில் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன அதுமட்டுமன்றி அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளரே தமிழகத்தின் உயிர் மூச்சே வருக வருக தமிழக மக்களை காக்க வரும் சிங்க பெண்ணே என பல்வேறு வாசகங்கள் இடம் பெற்றுள்ளன இவன் தஞ்சை திருவாரூர் மாவட்ட அதிமுக எனவும்  சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள.

அந்த சுவரொட்டியில் இடம்பெற்றுள்ள படத்தின் கீழ்  அதிமுக என மட்டும் குறிப்பிட்டுள்ளது. அதிமுகவில் என்ன பொறுப்பில் இருக்கிறார்கள் என குறிப்பிடப்படவில்லை, இதனால் உண்மையிலேயே அதிமுகவினர் தான் இதை  ஒட்டி இருக்கிறார்களா? என்ற சந்தேகம் நிலவுகிறது, அதிமுகவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த அவர் செய்த வேலை என அதிமுக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர், இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பள்ளதால் தஞ்சையில் பரபரப்பு நிலவியது.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை.