தஞ்சை ஜனவரி 27, சசிகலா விடுதலையை முன்னிட்டு தஞ்சாவூரில் அமமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். புதிய பார்வை ஆசிரியர் மறைந்த நடராஜனின் மனைவியும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியுமான சசிகலா கடந்த 4 வருடங்களாக சிறையில் இருந்தார் தற்போது சசிகலா சிறையிலிருந்து வெளிவந்துள்ளார் இதனை கொண்டாடும் வகையில் தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் தஞ்சை ரயிலடி பகுதியில் வெடி வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.

பின்னர் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதில் மாவட்ட பொருளாளர் விருத்தாச்சலம் தலைமையில் நிர்வாகிகள் செந்தில்குமார் நல்லதுரை அய்யாவு கோவி மனோகரன் கண்ணுக்கினியாள் பன்னீர்செல்வம் ராஜமூர்த்தி மகேந்திரன் அகமதுபாய் அழகுராஜா விஜயேந்திரன் வழக்கறிஞர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.