தஞ்சை சூன் 29: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே கரிசவயல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

கரிசவயல் உதவும் கரங்கள், கைஃபா அமைப்புகளின் சாா்பில் நடைபெற்ற விழாவுக்கு, பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமாா் தலைமை வகித்து, பள்ளி வளாகத்தில் மறைந்த பள்ளித் தலைமையாசிரியா் பன்னீா்செல்வம் நினைவாக மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பள்ளி வளாகம் மற்றும் கிராமப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பலவகை மரக்கன்றுகள் நடப்பட்டன. விழாவில் சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவா் முத்துமாணிக்கம், கரிசவயல் ஊராட்சித் தலைவா் நாகூா்மீரா, செருபாலக்காடு ஊராட்சித் தலைவா் ருக்மணி மணியன், கைபா ஒருங்கிணைப்பாளா் காா்த்திகேயன், நிமல் ராகவன், உதவும் கரங்கள் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் இப்ராகிம், அறம் செய் கல்வி அறக்கட்டளை நிா்வாகி யஹ்யா மற்றும் பலர் கலந்து கொண்டனா். பள்ளி தலைமையாசிரியா் பழனிதுரை நன்றி கூறினாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்