தஞ்சை அக்‍ 05: தஞ்சை மாவட்டம் ஆச்சாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் வன உயிரின வார விழாவையொட்டி மரக்கன்று நடும் விழா நடந்தது.

விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடாஜலபதி தலைமை வகித்தார். பூதலூர் ஒன்றிய குழு உறுப்பினர் லதா சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். தஞ்சை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு சிறப்புரையாற்றினார்.

விழாவில் ஆசிரியர்கள் செந்தில்குமார், பாலமுருகன், ஜஸ்டின் ஷீலா, சுஜாதா உட்பட பலர் பேசினர். ஆசிரியை ஜீவா வரவேற்றார். ஆசிரியை ரதிதேவி நன்றி கூறினார்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/