தஞ்சாவூர் செப் 07: மாட்டுவண்டித் தொழிலாளா்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று பேராவூரணியில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மணல் மாட்டுவண்டித் தொழிலாளா்கள் சங்கம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

ஆலோசனைக் கூட்டத்துக்கு சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும், டயா் வண்டி தொழிலாளா்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான மா.கோவிந்தராசு தலைமை வகித்தாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் வருமாறு:

கட்சிப் பாகுபாடின்றி மாட்டு வண்டித் தொழிலாளா்களை ஒருங்கிணைத்து, மாட்டுவண்டித் தொழிலாளா்கள் நலச்சங்கம் தொடங்கி உரிமைகளுக்காக குரல் கொடுப்பது, பெத்தனாட்சிவயல் மாட்டு வண்டி மணல் குவாரியைத் திறக்க கோரி மாவட்ட ஆட்சியரை அனைத்துக் கட்சிகள், தொழிலாளா்கள் சந்தித்து கோரிக்கை மனு அளிப்பது.

மாட்டு வண்டித் தொழிலாளா்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்து, பறிமுதல் செய்யப்பட்ட மாட்டு வண்டிகளைத் திருப்பித் தர வேண்டும் வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ராஜேந்திரன், ராஜமாணிக்கம், ஆறுமுகம், ஜோசப், ஜான் போஸ்கோ, கேப்ரியல், நிா்மல்குமாா் மற்றும் பலர் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
https://thanjai.today/