தஞ்சாவூர் நவ 15 தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வேளாண் அலுவலர் பணி தோட்டக்கலை அலுவலர் பணிக்கு காலி பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டது இதற்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன.

தற்போது எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு நேர்காணல் நடத்தப்பட உள்ளது. அதன்படி எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்காணலுக்கு தயாராகும் வகையில் மாதிரி நேர்காணல் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் எதிர்வரும் 17ஆம் தேதி (புதன்கிழமை) இலவசமாக நடத்தப்படுகிறது.

எனவே இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நேரிலோ அல்லது 8110919990 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு தங்களது பெயர் மற்றும் தேர்வு பதிவு எண்ணை குறிப்பிட்டு வருகிற 16-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

க.சசிகுமார் நிருபர்.
http://thanjai.today/