தஞ்சாவூர் பிப் 06: ஆலக்குடியில் சம்பா அறுவடைப் பணிகள் மும்முரமாக தொடங்கி உள்ளது. இதனால் விவசாயிகள் மும்முரம் அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு பெய்த தொடர் கனமழையால் சாகுபடி செய்யப்பட்டு இருந்த சம்பா, தாளடி பயிர்கள் மற்றும் இளம் நாற்றுக்கள், நாற்றங்கால் ஆகியவை நீரில் மூழ்கி பாதித்தது.

மழை நின்ற நிலையில் வயல்களில் தேங்கியிருந்த நீரை வடித்து சாகுபடி பயிர்களை விவசாயிகள் காப்பாற்றினர். அதன் பின்னரும 2 நாட்கள் கனமழை பெய்தது. இதனால் பால்பிடிக்கும் தருவாயில் இருந்த சம்பா பயிர்கள் வயலில் சாய்ந்தது. பூச்சிகள் தாக்குதலும் இருந்தது. இவ்வாறு பல்வேறு இடர்பாடுகளை தாண்டிய நிலையில் தற்போது பயிர்கள் நன்கு முற்றி உள்ளது.

இதையடுத்து விவசாயிகள் அறுவடைப்பணிகளை மும்முரமாக தொடங்கி உள்ளனர். தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நெல் அறுவடை ஆரம்பம் ஆகியுள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டம் ஆலக்குடி பகுதியில் அறுவடை இயந்திரத்தை கொண்டு வயலில் விவசாயிகள் தீவிரமாக அறுவடைப்பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் அறுவடை இயந்திரங்கள் தஞ்சை பகுதிக்கு வந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.