தஞ்சாவூர் டிச.1 – தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா அலிவலம் எஸ்.இ.டி. வித்யாதேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இறகு பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

தமிழ்நாடு பேட்மிண்டன் அசோஷியேசன் மற்றும் இந்தியன் பேட்மிண்டன் அசோஷியேசன் இணைந்து கோவையில் மாநில இறகு பந்து சாம்பியன்ஷிப் போட்டி ராக்ஸ் பேட்மிண்டன் அகாடமியில் கடந்த 24 தேதி முதல் நவம்பர் 28 தேதி வரை 5 நாட்கள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்தும் 550 க்கும் மேற்பட்ட பேட்மிண்டன் விரர்கள் மற்றும் விராங்கனைகள் கலந்து கொண்டனர் .

இதில் பல சுற்றுகளில் வெற்றி பெற்று 19 வயதிற்குட்பட்டோர்கான இரட்டையர் பிரிவில் பட்டுக்கோட்டை வட்டம் அலிவலம் எஸ்.இ.டி. வித்யா தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 11 ஆம் வகுப்பு மாணவன் எம். ஸ்வஸ்திக் (15) கலந்து கொண்டு வெள்ளிபதக்கமும் மற்றும்11 வகுப்பு மாணவி எஸ். ஹாஸ்னி வெண்கல பதக்கமும் பரிசு தொகையும் பெற்று சாதனை புரிந்து பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.

சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற மாணவர்கள் இருவரையும்
எஸ்.இ.டி வித்யா தேவி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாக இயக்குநர் எல்.கோவிந்தராசு, பள்ளியின் தாளாளர் சித்திரா கோவிந்தராசு, முதல்வர் கதிரவன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள்.

க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/