தஞ்சாவூர் ஆக :21- தஞ்சாவூரில் முதுகு தண்டுவட தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுமிக்கு 16 கோடி ரூபாய் மதிப்புள்ள ஊசி மருந்து வாங்க பெற்றோர்கள் தவித்து வருகின்றனர்.
தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை சுராஜ்பூர் நகரை சேர்ந்தவர் ஜெகதீஷ் (37) ரெப்கோ வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார் இவரது மனைவி எழிலரசி (32) ரெப்கோ வங்கியில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இவர்களது மகள் பாரதி இந்த சிறுமிக்கு கடந்த 9ஆம் தேதி முதுகுத் தண்டு வட தசைநார் சிதைவு என்ற நோய் இருப்பது டாக்டர்கள் கண்டறியப்பட்டது இது அந்த நோயின் இரண்டாம் நிலையை உறுதி செய்யப்பட்ட சிறுமி இதுவரை தவழ்ந்த நிலையில் தானாக எழுந்து நிற்க முடியாமல் இருக்கிறார் சிறுமியை பரிசோதித்த டாக்டர்கள் இவருக்கு” Z0LGENSMA” என்ற ஊசி மருந்து செலுத்தினால் மட்டுமே குணப்படுத்த முடியும்.
மருந்தின் விலை ரூபாய் 16 கோடி இறக்குமதி வரி ரூபாய் 6 கோடி ரூபாய் 22 கோடி செலவாகும் எனக் கூறினார் இதனால் மனம் உடைந்த பெற்றோர்கள் மித்ரா என்ற சிறுமிக்கு ஏற்கனவே தசை நார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூரில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையில் கடந்த 4 நாட்களாக சிறுமி பாரதிக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து ஜெகதீஷ் கூறியதாவது இயற்கையாக புரோட்டின் சத்து குறைபாடு காரணமாக நோய் ஏற்பட்டது இதற்கான ஊசி மருந்து விலை 16 கோடி ரூபாய் இவ்வளவு பெரிய தொகையை எங்களால் திரட்ட முடியாது, தற்போது நண்பர்கள் உறவினர்கள் உதவியால் வெறும் 50 லட்சம் தான் கிடைத்துள்ளது நண்பர்கள் மூலம் முதல்வர் முக ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் பொதுமக்களிடமும் உதவி கேட்டுள்ள இன்னும் இரண்டு மாதங்களுக்குள் இந்த ஊசியை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என கண்ணீர் மல்க கூறினார்,
செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://www.tamilcinema.today/