தஞ்சை ஜனவரி தஞ்சை பெரிய கோயிலில் பாதுகாப்புக் கருதி 30க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் கோயில் முழுவதும் பொருத்தப்பட்டுள்ளது, இத்தனை கண்காணிப்புகள் இருந்த போதிலும், நேற்று முன் தினம், சென்னையில் இருந்து வந்த ஒரு குடும்பத்தினரின் 12 பவுன் நகைகள் திருட்டு போயின.

இந்த திருட்டானது கோயில் வளாகத்துக்குள்ளேயே நடந்ததுள்ளது, கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட ராஜராஜன் கோபுரத்தின் கீழ் கட்டுப்பாட்டு அறையும் உள்ளது, திருட்டு நடந்த பிறகு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர், ஆனால் சில கேமராக்களை தவிர முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் சில நாட்களாக செயல்படவில்லை என்று தெரிகிறது, இது குறித்து ஏற்கனவே காவல் துறை கோவில் நிர்வாகத்திற்கும், தொல்லியல் துறைக்கும் தகவல் தெரிவித்து உள்ளனர், ஆனால் கேமராக்களை சரி செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது, இதனால் போலீசாரால் முழுமையாக ஆய்வு செய்ய முடியவில்லை, எனவே கோயில் நிர்வாகம் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் வேகமாக செயல்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தி ம.செந்தில்குமார்
தஞ்சை