தஞ்சை சூலை 02: தஞ்சையில் சிஐடியூவை சேர்ந்த தஞ்சை மாவட்ட சாலையோர சிறு கடை வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தஞ்சை மாவட்டத்தில் சாலையோரங்களில் சிறு கடை வைத்து பிழைப்பு நடத்தி வரும் ஏழை வியாபாரிகளுக்கு மத்திய அரசு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் நிபந்தனையின்றி வங்கிக் கடன் வழங்க வேண்டும். சிறுகடை வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ற பெயரில் சாலையோரங்களில் சிறுகடை நடத்தி வரும் ஏழைகளை அப்புறப்படுத்துவதைக் கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவா் மணிமாறன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ஜெயபால், துணைச் செயலா்கள் அன்பு, செங்குட்டுவன், தரைக்கடை சங்க மாவட்டச் செயலா் மில்லா் பிரபு, துணைத் தலைவா் குருசாமி, முறைசாரா சங்க மாவட்டச் செயலா் போ்நீதி ஆழ்வாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
பூதலூர்
http://thanjai.today