தஞ்சை பிப் 11 தஞ்சையில் சாலை பாதுகாப்பு வாரத்தையொட்டி 32 வது சாலை பாதுகாப்பு மாதம் கடந்த 18ஆம் தேதி முதல் வருகிற 17-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது இதையொட்டி சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி 24 வது நாளான தஞ்சையில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து போலீஸ் சார்பில் கார்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்பட்டது சீட் பெல்ட் அணிந்து வாகனங்கள் ஓட்டுவதன் அவசியத்தையும் வலியுறுத்தி இந்த கார்கள் அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது இந்த ஊர்வலத்திற்கு மோட்டார் வாகன ஆய்வாளர் விஜயகுமார் தலைமை தாங்கினார் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் குண்டுமணி அணிதான் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தஞ்சை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு வரதராஜன் கார்கள் அணிவகுப்பு ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் தஞ்சை திலகர் திடலில் இருந்து தொடங்கி ராஜா ராஜன் சோழன் சிலை, அரசு மருத்துவமனை சாலை, அண்ணா சாலை, காந்தி சாலை, ஆற்றுப்பாலம் ,ரயில் நிலையம், மேரிஸ் கார்னர், ராமநாதன் ரவுண்டானா, மணி மண்டபம் வழியாக அரசு தொழிற்பயிற்சி நிலைய மைதானத்தை சென்றடைந்தது,

இதில் தஞ்சை மாநகரில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்த கார்கள் மற்றும் கார்கள் விற்பனை நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என சுமார் 25-க்கும் மேற்பட்ட கார்கள் பங்கேற்றனர் இந்த நிகழ்ச்சி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ்குமார் ரமேஷ் மற்றும் போக்குவரத்து போலீசார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்,
தஞ்சை