தஞ்சையின் கரந்தை பகுதியை சேர்ந்தவர் மாணவர் ரியாசுதீன், இவர் இங்குள்ள கல்லூரி ஒன்றில் பி.டெக் இரண்டாமாண்டு மெக்ட்ரானிக்ஸ் என்னும் பிரிவில் பயின்று வருகின்றார், இவர் தயாரித்துள்ள மிகவும் எடைக் குறைந்த செயற்கை கோள் அடுத்த ஆண்டு ஜூன் மாத வாக்கில் விண்ணிற்கு அனுப்பபட உள்ளது.

அமெரிக்க நாசா விண்வெளி மய்யமும்,அய் டூ லேனிங் என்ற அமைப்பும் இணைந்து க்யூப் இன் ஸ்பேஸ் என்கின்ற போட்டியை நடத்தி வருகின்றது, இதில் 70க்கும் மேற்ப்பட்ட நாடுகளிலிருந்து குறைந்தது 20 மாணவர்கள் போட்டியில் பங்கேற்கின்றனர்.

2019 மற்றும் 2020 ஆம் ஆண்டிற்கான போட்டியில் கலந்து கொண்டு விஷன் 1 மற்றும் விஷன் 2 என்ற இரண்டு செயற்கை கோள்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இது மிகச் சிறிய 37 மில்லி மீட்டர் உயரமும், 33 கிராம் எடையும் கொண்டதாக உள்ளது.

நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் விஷன் 1 என்ற செயற்கைகோளை ‍தெரிவு செய்துள்ளது, இதனை அடுத்த ஆண்டு 2021ஜூன் மாதம் வாக்கில் விண்ணிற்கு அனுப்ப உள்ளனர், ரியாசுதீன் இது போன்ற ஆய்வுகளை தனது பன்னிரெண்டாம் வகுப்பிலிருந்தே செய்து வருவதாக ‍தெரிவிக்கின்றார்.

செய்தி : Frankie & ம.செந்தில்குமார்