தஞ்சை ஜன,7 போக்குவரத்து தொழிலாளர்களின் 14 வது ஊதிய பேச்சு வார்த்தையை விரைந்து முடிக்க வேண்டும், தஞ்சையில் நடை பெற்ற ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து ஏஐடியூசி ஓய்வு பெற்றோர் சங்கத்தின் நிர்வாக குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சங்க தலைவர் மல்லி .தியாகராஜன் தலைமையில் நடை பெற்றது . பொதுச்செயலாளர் பி .அப்பாதுரை நடந்துள்ள பணிகள் குறித்து பேசினார் .ஏஐடியூசி மாநில செயலாளர் சி .சந்திரகுமார் ,சங்க மாநில துணை தலைவர் துரை .மதிவாணன் சிறப்புரையாற்றினர் .கூட்டத்தில் நிர்வாகிகள் அ .பீர்த்தம்பி , எம் .வெங்கடபிரசாத் ,பி .லதா ,எஸ் .சித்ரா ,முத்துச்செவி ,ரோஸ் பவுலின் ,எஸ் .முருகையன் ,சுப்பிரமணியன் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர் .

பின்னர் கூட்டத்தில் தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன .போக்குவரத்து கழகங்களில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கடந்த 2019 ஏப்ரல் முதல் இன்றுவரை ஓய்வு கால பணிக்கொடை ,பி.எப். விடுப்பு தொகை உள்ளிட்ட பணப்பலன்கள் ஒரு ரூபாய் கூட வழங்கப்படாத நிலையில் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 972 .43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்க பட்ட நிலையில் 21 நாட்கள் சென்றும் இன்று வரை பணப்பலன்கள் வழங்கப்படாதது கண்டனத்திற்குரியது.

அரசு கூடுதலாக நிதி அளித்து 2020 டிசம்பர் வரை ஓய்வு ,விருப்ப ஓய்வு பெற்றவர்கள் ,பணியில்.இறந்து போன தொழிலாளர்களுக்கு.உரிய பணப்பலன்களை உடனே அளித்திடவும் , பணியில் உள்ள தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தை 15 மாதங்கள் கடந்து விட்ட நிலையில் இனியும் காலம் கடத்தாது உடனே பேசிமுடித்து சம்பள உயர்வை வழங்கிட தமிழகஅரசையும் ,கழக நிர்வாகங்களையும் ஏஐடியூசி கேட்டுக்கொண்டார்கள்.

க.சசிகுமார், நிருபர்,
தஞ்சாவூர்