தஞ்சை, சூலை: 7, தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளில் ஒன்றை ஒதுக்கீடு செய்தால் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் என திருநங்கைகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து திருநங்கை சத்தியா தலைமையிலான திருநங்கைகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தஞ்சை தற்காலிக பேருந்து நிலையம் அருகே 6 திருநங்கைகள் குழுவாக வசித்து வருகிறோம் திருநங்கைகளின் அன்றாட வாழ்வாதார பிரச்சனையான பிச்சை கேட்பது மற்றும் சமூக பிரச்சனையான மூன்றாம் பாலினத்தவர் வன்கொடுமை மற்றும் சமூக சீர்கேடு போன்றவைகளை தாங்கிக்கொண்டு ஜீவனம் நடத்தி வருகிறோம்.

இந்த சூழ்நிலையில் நாங்கள் சமூகத்தில் கௌரவமாக வாழ்ந்திட தஞ்சை பழைய பேருந்து நிலைய வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் கடைகளில் ஒரு கடையை திருநங்கைகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் அவ்வாறு ஒதுக்கீடு செய்தால் நாங்கள் சிற்றுண்டி கடை வைத்து வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வோம்.

இது சமூகத்தில் ஒரு அந்தஸ்துடன் நாங்கள் வாழ வழிவகை செய்யும் என்ற நம்பிக்கை உள்ளது எனவே மாவட்ட கலெக்டர் எங்களுக்கு கடை ஒதுக்கீடு செய்து உதவிட வேண்டும் என மனுவில் திருநங்கைகள் வலியுறுத்தியுள்ளனர்.

செய்தி க.சசிகுமார் நிருபர்.
https://thanjai.today/