தஞ்சாவூர் ஆக 02 : தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே ஆலடிக்குமுளை ஆதிதிராவிடர் காலனியில் சேதமடைந்து, ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை புதிதாக கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் 40 க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்டோர் குடியிருந்து வருகின்றனர்.
இங்கு சுமார் 40 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட, தொகுப்பு வீடுகளின் பக்கவாட்டுச் சுவர் இடிந்தும், மேற்கூரையின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தும் காணப்படுகிறது.
பல வீடுகளில், குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், தற்போது பெய்து வரும் மழை காரணமாக வீடு இடிந்து விழுமோ என்ற பயத்துடனேயே, அருகிலேயே கீற்றில் தடுப்பு அமைத்து குழந்தைகளுடன் உறங்கி எழும் அவலநிலையில் உள்ளனர்.
ஆபத்தான நிலையில் உள்ள தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு, புதிதாக தொகுப்பு வீடு கட்டித் தரவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/