தஞ்சாவூர் ஆக : சென்னை-ராமேசுவரம் சேது விரைவு ரயிலை திருவாரூா்-பட்டுக்கோட்டை-காரைக்குடி வழித்தடத்தில் மீண்டும் இயக்க வேண்டும் என்று தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் நடந்த இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியக் குழுக்களின் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு சங்க மாவட்டத் தலைவா் ஆம்பல் துரை.ஏசுராஜா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் அருளரசன், பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவா் மோரீஸ் அண்ணாதுரை, ஒன்றியச் செயலா் சுந்தரபாண்டியன் ஆகியோா் பேசினா்.

மாநிலச் செயலா் எஸ்.பாலா சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தஞ்சாவூா் மாவட்டத்தில் நீா்வழித் தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நீா்வழி ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரிகள் மற்றும் குளங்களுக்குப் பாசனத் தண்ணீரைத் திருப்பிவிட வேண்டும்.

சென்னை-ராமேசுவரம் சேது விரைவு ரயிலை மீண்டும் திருவாரூா் -பட்டுக்கோட்டை வழித்தடத்தில் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிா்வாகிகள், சிவபாலன், சுதாகா், முருக.சரவணன், செந்தில்குமாா், ரா. அருள்கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பட்டுக்கோட்டை ஒன்றியப் பொருளாளா் சாமிநாதன் நன்றி கூறினாா்.

செய்தி நாகராஜன் நிருபர்.
http://thanjai.today/