தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டுள்ள புதிய பதிவு அலுவலகத்தில் கட்டிடத்தின் தரைத்தளத்தில் எண் 1, இணை சார்பதிவாளர் அலுவலகம் முதல் தளத்தில் எண் : 2. இணை சார்பதிவாளர் அலுவலகம் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவு துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசுவினி ஆறு படுகை அணை விவசாயிகள் மேம்பாட்டுச் சங்கம் தலைவர் வீரசேனன் சென்னை பதிவுத் துறைத் தலைவருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் கடந்த 1865 ஆம் ஆண்டு முதல் பதிவு துறை அலுவலகம் இயங்கி வருகிறது, இங்கு பத்திரப்பதிவு மற்றும் திருமணப்பதிவு நிறுவனங்கள் போன்றவற்றில் பதிவு செய்பவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் அதைத்தொடர்ந்து நிர்வாக வசதிகளுக்காக கூடுதலாக ஒரு பத்திரப்பதிவு அலுவலகம் துவங்கப்பட்டது.

மேலும் பட்டுக்கோட்டை பதிவு மாவட்டம் தணிக்கை அலுவலகம் புதிதாக ஏற்படுத்தப்பட்டது, இந்த மூன்று அலுவலகங்களும் தனியாருக்கு சொந்தமான கட்டிடத்தில் இன்றுவரை இயங்கி வருகிறது, இதற்கான புதிய கட்டிடங்களை 1865 முதல் இயங்கி வருகின்ற அந்தக் கட்டடத்தின் இடத்திலேயே கட்ட வேண்டும் என பலமுறை கோரிக்கை மனு கொடுத்து, நான்கு தளங்களுடன் கூடிய புதிய கட்டிடத்தை அரசு தற்போது கட்டி வருகிறது.

ஆனால் கட்டிடத்தின் அமைப்பின்படி பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் கீழ்தளத்தில் மாவட்ட பதிவாளர் அலுவலகம், முதல் தளத்தில் மாவட்ட கல்வித்துறை தணிக்கை அலுவலகம், இரண்டு மற்றும் முன்றாம் தளத்தில் இணை சார்பதிவாளர் அலுவலகம் மூன்றாம் தளத்தில் என்ற இரண்டு இணை சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும் வகையில் கட்டிட வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் மேற்கண்ட அலுவலகங்களுக்கு செல்ல போதிய தானியங்கி தூக்கு வசதி இல்லை, மேலும் சாய்வு நடைபாதை இல்லை, இதனால் பதிவு துறை அலுவலகத்திற்கு செல்லும் பொதுமக்கள் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும், எனவே பதிவுத்துறை தலைவர் பட்டுக்கோட்டையில் புதிதாக கட்டப்பட்டு வரும் பதிவுத்துறை வளாகத்தின் தரை தளத்தில் எண், 1, இணை சார்பதிவாளர் அலுவலகம் முதல் தளத்தில் எண், 2,இரண்டு இணை சார்பதிவாளர் அலுவலகம் இயங்க தகுந்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.

செய்தி சசிகுமார் நிருபர்.
தஞ்சை.