தஞ்சை ஜன 27 தஞ்சையில் நடந்த குடியரசு தின விழாவில் 77 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கோவிந்த ராவ் வழங்கினார், குடியரசு தின விழாநாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
தஞ்சை மாவட்டம் சார்பில், தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார் தொடர்ந்து வெண்புறா மற்றும் மூவர்ண பலூன்களை கலெக்டர் பறக்கவிட்டார் அதன் பின்னர் திறந்த ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
பின்னர் சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு கைத்தறி ஆடை அணிவித்து கவுரவித்தார், அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் 77 பயனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சத்து 43 ஆயிரத்து 528 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு, ரூபாய் 50,000 மதிப்பிலும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில் 11 பயனாளிகளுக்கு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூபாய் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 126 மதிப்பிலும் வருவாய் துறை சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூபாய் 30 ஆயிரத்து மதிப்பிலும் வேளாண்மைத்துறை சார்பில் நாலு பயனாளிகளுக்கு ரூபாய் 67 ஆயிரத்து 402 மதிப்பிலும் என மொத்தம் 77 பயனாளிகளுக்கு ரூபாய் 3 லட்சத்து 43 ஆயிரத்து 528 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன பின்னர் கலை பண்பாட்டு துறை மற்றும் தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கரகாட்டம் கோலாட்டம் தப்பாட்டம் அடங்கிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், தஞ்சை டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தேஷ்முக் சேகர் சஞ்சய், தஞ்சை மாவட்ட வருவாய் அதிகாரி அரவிந்தன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, வருவாய் கோட்டாட்சியர் வேலுமணி, தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்
செய்தி க.சசிக்குமார் நிருபர்,
தஞ்சை.